பக்கம் எண் :

தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின் .

 

(இதுவுமது)

காமம் பனைத் துணையும் நிறைய வரின் -மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப வுண்டாகு மாயின் ; தினைத் துணையும் ஊடாமை வேண்டும் -அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற் கொள்ளா திருத்தல் வேண்டும் .

ஊடின் புணர்ச்சி தடைப் பட்டுக் காம நோய் அள விறந்த துன் பந்தரு மென்று , பிறர்க்கு நல்லது சொல்வாள் போன்று தன் விதுப்புக் கூறியவாறு . தினை பனை யென்னும் அளவுப் பெயர்கள் முறையே சிற்றளவும் பேரளவும் உணர்த்தி நின்றன . உம்மையிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு ; பின்னது உயர்வு சிறப்பு.