பக்கம் எண் :

பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.

 

(இதுவுமது)

பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல

அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.