பக்கம் எண் :

எழுதுங்காற்கோல்காணாக் கண்ணேபோற்கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.

 

(இதுவுமது)

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் - மற்ற நேரமெல்லாங் காணக்கூடியதாயிருந்தும் , கண்ணிற்கு மைதீட்டும்போது மட்டும் தீட்டுக் கோலைக் காணமுடியாத கண்ணேபோல ; கண்டவிடத்துக் கொண்கன் பழிகாணேன்-கணவரைக் காணாத விடத்தெல்லாம் அவர் தவற்றைக் கண்டிருந்து . அவரைக் கண்ட விடத்து மட்டும் அதைக் காணவியலாது போகின்றேன்.