பக்கம் எண் :

காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
காணேன் றவறல் லவை.

 

(இதுவுமது)

காணுங்கால் தவறாய காணேன்-கணவரை யான் காணும்பொழுது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன்-அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளையல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.

முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமையாற் புலந்திலேன் என்பதாம் . கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்தது.