பக்கம் எண் :

ஊடலினுண் டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று.

 

(இதுவுமது)

புணர்வது நீடுவது(கொல்) அன்றுகொல் என்று-இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதலால் ; ஊடலின் ஒர் துன்பம் உண்டு-இன்பத்திற்கேதுவான ஊடலிலும் ஒரு துன்பமுள்ளதாம்.

விரைந்து கூடற்கேதுவான ஊடலே பயன்தருவதென்பதாம் . கருதுதலால் என்பது அவாய்நிலையால் வந்தது . -சிறப்பும்மை தொக்கது . ' கொல்' முன்னுங் கூட்டப்பட்டது . ' ஆங்கு ' அசைநிலை.