பக்கம் எண் :

நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
காதல ரில்லா வழி.

 

(உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் நொந்து சொல்லியது.)

நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நம் செயல் பற்றி நொந்தாரென்று அந்நோவினையறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ; நோதல் எவன் - ஒருவர் நொந்து என்ன பயன் ?

இவள் நம் காதலியல்லள் .ஆகலால் நம் நோவறியாள் . ஆகவே, நாம் நோவதாற் பயனில்லை யெனத் தன் ஆற்றாமையுணர்த்தியவாறு. அறிதல்-அறிந்து ஊடல் தீர்தல் மற்று-அசைநிலை .