பக்கம் எண் :

இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண்டனள்.

 

(இதுவுமது)

இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால். இப்பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம் என்று கூறினேனாக; கண் நிறை நீர் கொண்டனன் - அதனால் மறுபிறப்பில் நான் பிரிந்துபோவேனென்று குறித்ததாகக் கருதித் தன் கண்நிறையக் கண்ணீரைப் பெருக்கிவிட்டாள்.

நான் சொன்ன வெளிப்படைச் சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டதல்லது என்பால் தவறில்லை யென்பதாம்.