பக்கம் எண் :

ஊடிப் பெருவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு.

 

(இதுவுமது)

நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய வுப்பு- இதுபோது இவள் நெற்றி வெயர்க்குமளவு செய்த கலவி்யின்கண் உள்ள இனிமையை ; ஊடிப்பெருகுவமோ -இன்னுமொருகால் இவள் ஊடி யாம் பெறவொண்ணுமோ!

இனிமை ஒருங்கே நுகரும் ஐம்புலவின்பம். இனி அவ்வப்போது அரிதென்று பெற்றதன் சிறப்புக் கூறியவாறு. நுதல் வெயர்ப்பச் செய்தது ஒரு சிறந்த கலவிவகை யெனினுமாம். 'கொல்' அசைநிலை 'ஓ' ஐயவினா , 'இவளூடி' என்பது தனிநிலை யமைப்பு.