பக்கம் எண் :

பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.

 

இல் இறப்பான் கண் - பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை , பாவம் , அச்சம் , பழி என நான்கும் இகவாவாம் - பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம்.

அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும்
பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்
றச்சத்தோ டிந்நாற் பொருள்.

(82)

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ
வுட்கான் பிறனில் புகல்
(83)


காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் -நீணிரயத்
துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட
இன்ப மெனக்கெனைத்தாற் கூறு.

(84)

இவை நாலடியார்.