பக்கம் எண் :

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

 

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.

ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாதவனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.