பக்கம் எண் :

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

 

நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும்.

பொறையுடைமை யின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு . படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம்.