பக்கம் எண் :

திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

 

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் -செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று -- அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்கு செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

உம்மை உயர்வு சிறப்பு. துன்பத்திற்கு நோதலைத்
"தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்"

(58)
என்னும் நாலடியார்ச் செய்யுளால் அறிந்து கொள்க.