பக்கம் எண் :

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

 

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின்.

'விளைவயின்' வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.