பக்கம் எண் :

அஃகாமை செலவத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

 

செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் - ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம்.

அஃகாமை இங்கு ஆகு பொருளது.