பக்கம் எண் :

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறந்தெரிந்து கூறப் படும்.

 

பிறன்பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான்.

புறத்து என்பது அதிகாரத்தால் வந்தது. 'திறன்' வலிமை, அது இங்குத் திறனான பழிகளைக் குறித்தது; ஆதலால் ஆகுபொருளது. திறந் தெரிந்து கூறுவதற்குக் கரணியம் புறங்கூற்றைப் பற்றி அறிவிக்கப் பட்டமை அல்லது கேள்விப்பட்டமையென்பது, கருதலளவையால் அறியப்படும். செய்யாமற் செய்த புறங் கூற்றிற்குப் பழிவாங்குஞ் செய்கையாதலாலும், 'திறந் தெரிந்து' என்னுங் குறிப்பினாலும், நேரிற் சொல்லுதலும் உய்த்துணரப்படும்.