பக்கம் எண் :

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

 

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுட் பதர் என்று சொல்லுக.

அல் என்னும் வியங்கோளீறு முன்பு எதிர்மறையிலும் பின்பு உடன்பாட்டிலும் வந்தது. பதர் உள்ளீடல்லாத கூல மணி. மக்கட்பதர் அறிவாகிய உள்ளீடற்றவன் அல்லது அற்றவள்.