பக்கம் எண் :

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகும் மற்றும் பெயர்த்து.

 

இலன் என்று தீயவை செய்யற்க-எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் மீண்டும் வறியனாவான்.

தீவினையான் வந்த பொருளை விரைந்து இழந்து விடுவானாதலின் மீண்டும் வறியனாவான் என்றார். 'இலன்' இரண்டுள், முன்னது தன்மை யொருமைக் குறிப்பு வினைமுற்று; பின்னது படர்க்கையாண்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். 'மற்று' அசைநிலை. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.