பக்கம் எண் :

அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.

 

மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க.

அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.