பக்கம் எண் :

கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு.

 

நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு-தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.

கூற்றுவனை வெல்வதாவது சாவினின்று தப்புதல். அது இங்கு ஒருவர்க்குங் கூடாமையின் உம்மை எதிர்மறை. மார்க்கண்டேயன் இன்று மண்ணுலகில் இல்லாமையாலும், வேறுலகிலுள்ளான் என்பது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்தாமையாலும், அவனைப் பற்றிய கட்டுக் கதையை இங்கு எடுத்துக்காட்டுவது எள்ளளவும் ஏற்காது. வீட்டிலகிலுள்ளா னெனின் அது உரையளவையாற் பொருந்தும். ஆயின், அதற்கும், இறைவனே அவனை என்றும் பதினாறாட்டை யுலக வாழ்வினனாக்கினான் என்பது தடை யாகும். இறைவன் முன்பு தீர்மானித்த தொன்றைப் பின்பு மாற்றினானெனின், அது அவன் இறைமையை நீக்கி மாந்தத் தன்மையையே ஊட்டும். 'ஆற்றல்' ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்' ஆம்.