பக்கம் எண் :

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

 

குன்றிப் புறம் கண்ட அனையரேனும் - வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை யுடையவரேனும்; அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து - உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டிருப்பவரை உடையது இவ்வுலகம்.

செம்மை கருமை என்பன குன்றிமணியை நோக்கின் நிறப்பண்பும், கூடா வொழுக்கத்தினரை நோக்கின் குணப்பண்பும் , ஆகும். புறம் என்னுஞ் சொல் குன்றிக்கும் கூடாவொழுக்கத்தினர்க்கும் பொதுவாக முன்நின்றது . இங்ஙனம் நில்லாக்கால் பின்னர் வரும் அகம் என்னுஞ் சொற்கு முரணின்மை காண்க. 'குன்றி' ஆகு பெயர்.