பக்கம் எண் :

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

 

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை ; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும்.

களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், 'வீயா விழுமந் தரும்' என்றார்.