பக்கம் எண் :

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

 

கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்-களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது-அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகந் தவறாது கிட்டும்.

உயிர்நிற்பது உயிர்நிலை. தாம் குடியிருக்கும் வீடு போல்வது என்பதை யுணர்த்த 'உயிர்நிலை' யென்றார். உயிர்நிலை தள்ளுதலாவது அரசனால் தண்டிக்கப்படுதல்.

" கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்."(குறள்.550.)

" கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்"(சிலப். 20 . 654.)