பக்கம் எண் :

மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.

 

மனத்தோடு வாய்மை மொழியின்- ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தோடு தானம் செய்வாரின் தலை- அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.

தவத்தோடு தானஞ் செய்வதினினும் உளத்தோடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், "தவத்தோடு தானஞ் செய்வாரிற் றலை" என்றார்.