பக்கம் எண் :

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.

 

(இ-ரை) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது; பிறபகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை.

சினத்தின் நீட்சியே பகையாதலானும் புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.