பக்கம் எண் :

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

 

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு- சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக்கொண்டவன் கெடுதல். நிலத்து அறைந்தான் கை பிழையாத அற்று- நிலத்தின் கண் அறைந்தவன் கை தப்பாது நோவுதல் போன்றதாம்.

இங்குப் பொருள் என்றதைப் "பொருளல்லவரை பொருளாகச் செய்யும்" (751) என்பதிற் போலக் கொள்க.