பக்கம் எண் :

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

 

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்- ஒருவன் தம்மேற் கறுவுகொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்- திருப்பித்தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. இதனாற் பழிக்குப் பழி செய்யும் பகைமை பற்றி இன்னா செய்தல் விலக்கப்பட்டது.