பக்கம் எண் :

இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

 

இன்னா செய்தாரை ஒறுத்தல்- தமக்குத்தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் நாண நல் நயம் செய்து விடல்- அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம்.

பிறர் செய்த தீமைகளையும் தாம் செய்த நன்மையையும் நினைப்பின் மீண்டுந் தளிர்க்கு மாதலின் முற்றும் மறக்கற் பாலன வாயின.