பக்கம் எண் :

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி.

 

நல் ஆறு எனப்படுவது யாது எனின்- பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியென்று சொல்லப்படுவது எது என வினவின் யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி- அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும்.

"யாதொன்றும்" என்றது துறந்தாரை நோக்கி ஓரறிவுயிரையும் உட்படுத்தற்கு.