பக்கம் எண் :

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.

 

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறவிநிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும் பொருட்டு உலகப்பற்றைத் துறந்தவருளெல்லாம் ; கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை- கொலைவினைக் கஞ்சிக் கொல்லா வறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான்.

பிறவி நிலைமையாவது எல்லாவுயிர்களும் இருதிணைப் பிறப்பிலும் எல்லையில்லாது பிறந்திறந்து பிறப்புப்பிணி மூப்புச் சாக்காட்டொடு வறுமையும் பசியும் பகையும் உடல் வருத்தமுங் கொண்டு வருந்துதல்.