பக்கம் எண் :

நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

 

நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - பேசமுடியாவாறு நாவையடக்கி விக்கல் எழுவதற்கு முன்; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - இல்லறத்தாரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிற்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.

நாச்செற்று விக்குள்மேல் வருதல் உயிர் போதற்கடையாளமாம். அன்று செய்தலேயன்றிச் சொல்லுதலும் கூடாமையின் ' வாராமுன் ' என்றும், "ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு." ஆதலால் ' மேற்சென்று' என்றுங் கூறினார். நிலையாமை நோக்கி நல்வினை விரைந்து செய்யத் தூண்டியவாறு.