பக்கம் எண் :

அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற்
றவா அது மேன்மேல் வரும்.

 

அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் -அவா இல்லாதார்க்கு அதனால் வருந்துன்பமுமில்லை; அஃது உண்டேல் தவா அது மேல்மேல் வரும் - அது இருப்பின் ( அது உள்ளவர்க்கு ) அதனால் எல்லாத்துன்பங்களும் விடாது வந்துகொண்டேயிருக்கும்.

அவாவுள்ளவர்க்கு வருவன தன்னாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூவகைத்துன்பங்களுமாம். 'தவாஅது' இசை நிறையளபெடை.