பக்கம் எண் :

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை.

 

இழவு ஊழ் (உற்றக்கடை) பேதைப்படுக்கும் -ஒருவன் தன்செல்வத்தை இழத்தற்குக்கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப்பேரறிஞனாயிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும்-இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும்.

செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்', 'ஆகலூழ்' என்பன 4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.