பக்கம் எண் :

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

 

செல்வம் செயற்கு - செல்வத்தைத்தேடுதற்கு; நல்லவை எல்லாம் தீய ஆம் - தீயூழுற்ற விடத்து நல்ல நிலைமைகளெல்லாம் தீயனவாகிப் பயன்படாது போம்; தீயவும் நல்ல ஆம் - நல்லூழுற்ற விடத்துத் தீயநிலைமைகளும் நல்லன வாகிப் பயன்படும்.

நல்லவும் தீயவுமான நிலைமைகள் காலமும் இடமும் கருவியும் முயற்சியும் துணையாட்களும் பற்றியனவாம். நல்லூழ் தீயூழ் என்பன அதிகாரத்தால் வந்தன. பொருளீட்டும் முயற்சிக்குரிய துணைக்கரணங்களும் ஊழால் வேறுபடு மென்பது இங்குக் கூறப்பட்டது.