பக்கம் எண் :

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

 

வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

'படாஅமை' இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத் தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல்.