பக்கம் எண் :

நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.

 

கல்லார்கண் பட்ட திரு-கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்; நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே -கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம்.

"இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது".(குறள்.1041).

ஆயினும், நல்லார் அவர்க்கு மட்டுந்தீங்கு செய்ய, கல்லார் செல்வம் அவர்க்கும் பிறர்க்கும் தீங்கு செய்தலின், முன்னவர் வறுமையினும் பின்னவர் செல்வம் தீயதென்றார். ஏகாரம் தேற்றம், 'கண்பட்ட' என்னுஞ் சொல்லாட்சி செல்வமும் வறுமையும் இடமாறி நின்றமையை உணர்த்தும். நல்லார்க்குத்தீமை துன்பமும், கல்லார்க்குத் தீமை இருமைத்துன்பத்திற்கும் ஏதுவான ஓழுக்கக்கேடும், அவராற் பிறர்க்குத்தீமை சிலர்க்கு ஒழுக்கக்கேடும் சிலர்க்குத் துன்பமுமாக இரண்டும் என அறிக. கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாம் என்னுங் கொள்கை பற்றிக் கற்றார் நல்லா ரெனப்பட்டார்.

"Riches serve a wise man, but command a fool". என்பது ஓர் ஆங்கிலப்பழமொழி.