பக்கம் எண் :

செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து.

 

செவிஉணவின் கேள்வி உடையார் -செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர்-நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர்.

செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையர் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினையுடையார் துன்பமின்றியின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.