பக்கம் எண் :

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி.

 

கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே தம் புலனுக்கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே.

ஐம்பொறிகளின் சிறந்த பயன் அறிவுப்பேறாதலின், கேள்வியறி விற்கேற்காத செவிகள் 'கேளாத்தகைய' என்றும், கேள்வியறிவு புகுதற்கு இயற்கைத்துளையினும் வேறான நுண்டுளை வேண்டியிருத்தலின், 'கேள்வியால் தோட்கப்படாத செவி' என்றும், கூறினார். ஏகாரம் தேற்றம்.