பக்கம் எண் :

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.

 

இவறலும்-செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; மாண்பு இறந்த மானமும் - தவறான தன்மானமும்; மாணா உவகையும் -அளவிறந்த மகிழ்ச்சியும்; இறைக்கு ஏதம் -அரசனுக்குக் குற்றங்களாம்.

இவறலால் மேற்கூறிய ஈகை (382), வகுத்தல் (385) கொடையளி, குடியோம்பல் முதலியன செவ்வையாய் நிகழா.மாண்பிறந்த மானமாவது, ஐங்குரவர்க்கும் அந்தணர், சான்றோ ரருந்தவத்தோர் முதியோர்க்கும் வணக்கஞ் செய்யாமை. மாணாவுவகையாவது மகிழ்ச்சியின் மைந்துற்று இகழ்ச்சியிற் கெடுதல் (539).