பக்கம் எண் :

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து,

 

மனநலத்தின் மறுமை ஆகும் -ஒருவனுக்கு மனநன்மையால் மறுமையின்பம் உண்டாகும்: அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து -அதுவும் இனநன்மையால் வலியுறுதலையுடையதாம்.

மேல் அரிதாய் நிகழ்வதாக ஒப்புக்கொண்ட மனநலத்தின் பயனைக் கூறியவர், அதற்கும் இனநலம் துணை செய்யும் எனத்தன் கொள்கையையும் விட்டுக் கொடாது நின்றார். ஏதேனுமொரு சமையத்துக் காமவெகுளி மயக்கங்களால் மனநலங் குன்றினும் அதை உடுக்கையிழ்ந்தவன் கைபோல இனநலம் உடனே திருத்து மென்பது கருத்து. 'மற்று' அசைநிலை. மனநலம் மட்டுமன்றி அதன் மறுமைப்பயனும் என்று பொருள்படுதலால், உம்மை இறந்தது தழுவிய எச்சம். இவ்வைந்து குறளாலும், சிற்றினஞ் சேர்தலின் தீமை நல்லினஞ் சேர்தலின் நன்மையாகிய எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது.