பக்கம் எண் :

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்.

 

யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; தேர்ந்தபின் தேறும் பொருள்தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க.

உம்மை சிறப்பின்பாற் பட்டது . வினைவகையில் , 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.