பக்கம் எண் :

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.

 

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

'இல்' என்றது பயனின்மையை, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே". என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.