பக்கம் எண் :

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

 

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாயிருப்பின் ; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ்வுலகத்தில் இல்லை.

பெருங்கொடை வறுமை நீங்குமளவு கொடுப்பது . சினத்தொடு கொடுப்பின் கொடைத்தன்மை கெடுமாதலின், 'வெகுளிபேணான் 'என்றார்.