பக்கம் எண் :

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு .

 

பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம்.

இந்நெறிமை ( விதி ) அரசர்க்கு மட்டு மன்றி எல்லாத்தொழிலாளர்க்கும் ஒப்ப வுரியதாயிருத்தலால் , 'உலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார் . இங்கு உலகம் என்றது தமிழகத்தை . எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே . இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும்பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது . வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.