பக்கம் எண் :

முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும் .

 

முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான்.

காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.