பக்கம் எண் :

வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு .

 

கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும்.

அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.