பக்கம் எண் :

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

 

தற்காத்து-தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டாற் பேணி - தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்துதம் - இருவரையும் பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்; பெண் - இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.