பக்கம் எண் :

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று.

 

வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது -அரசியல் வினைஞர், அரசின் உறவின்முறையார் ,பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற் செயல் பொருட்களால் மறைவாக ஆராய்வானே ; ஒற்று - சரியான ஒற்றனாவான்.

வினைசெய்வார் முதலிய மூவகுப்பாரும் அரசனுக்குத் தெரியாமலே தன்னாட்டொடும் பகை நாட்டொடும் தொடர்பு கொள்ளக்கூடுமாதலின் ,அவரனைவரையும் மறைவாக ஆராயவேண்டு மென்றார்,'ஆங்கு ' அசைநிலை.