பக்கம் எண் :

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

 

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி -அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; தன்னினும் முந்து மடியும் -அவனினும் முற்பட அழிந்து போம்.

அழிவு தருவதை உடன்கொண்டொழுகலாற் ' பேதை ' என்றும் ,அவனாற் காக்கப்படாமையால் அவனினும் முந்துற வழியும் என்றும் ,கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.