பக்கம் எண் :

வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.

 

வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தது - இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது ; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - ஆதலால் , எடுத்துக் கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யா திருத்தலை ஒழிக.

நிறை என்பதன் மறுதலையான குறையென்னுஞ்சொல் , ஒரு பொருள் அல்லது உறுப்பு இல்லாக் குறையை முதலிற் குறித்து , பின்பு அக்குறையால் ஏற்படும் தேவையையும் தேவையான பொருளையும் ஆகுபெயராக வுணர்த்திற்று . 'ஓம்பல்' என்றது நேராவாறு காத்தலை , தீர்ந்தன்று என்பது செய்தன்று என்னும் வாய்பாட்டு வினைமுற்று . செய்தனது - செய்தன்று (ஒருமை) , செய்தன (பன்மை) . உலகு ஆகுபெயர்.