பக்கம் எண் :

தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு .

 

வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் நன்றிசெய்தல் என்னும் பெருமிதம் ; தாளாண்மை என்னும் தகைமைக் கண்ணே தங்கிற்று - விடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம்.

வெறுங்கையால் வேளாண்மை செய்தல் கூடாமையின் , வேளாண்மைக்கு இன்றியமையாத பொருள் தாளாண்மையாலேயே வருதல் பற்றி 'தகைமைக்கட்டங்கிற்றே' என்றார் . பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.